Wednesday, August 27, 2008

கடைசியாக பின்னுட்டமிட்டவர்கள்

வணக்கம் எல்லோருக்கும் வணக்கம்...

கொஞ்ச நாளா நான் ப்லொக்ல சில பேர் போட்டு இருக்கிற மாதிரி RECENT COMMENTS எங்கிற பெட்டிய எப்படி என் ப்லொக்ல வர வைக்கிறது எங்கிறத தேடிக்கிட்டு இருந்தேன்... ஜி எங்கிற மூத்த பதிவர்கிட்ட கேட்டபோது அவருக்கும் தெரியாது google ஆண்டவர கேட்டுப்பாருங்க தெரியும் என்னாரு... நானும் அவர்கிட்ட கேட்டு பார்த்த போது அவர் அதுக்கான சரியான விடைய தந்துட்டாரு அது என்கூடவே தங்கீட கூடாது மத்தவங்களும் இத தெரிஞ்சுக்கனும் இது அவங்களுக்கும் உதவியா இருக்கனும் என்கிறத்துக்காகத்தான் இந்தப்பதிவு

 
  •  முதலில் http://draft.blogger.com/home என்னும் வலைப்பதிவுக்கு செல்லவும். இதற்கு முதலில் நீங்கள் http://blogger.com வலைப்பதிவில்தான் உங்கள் உங்கள் பதிவுகளை வலையேற்றிக்கொண்டு இருந்தீர்கள் என நினைக்கிறேன் இதில் நான் தந்திருப்பது அதன் beta version என்று நினைக்கிறேன். இப்போது sign in ஆனவுடன் நீங்கள் Dashboard பகுதியில் இருப்பீர்கள் 
  • அதில் Layout பகுதிக்கு செல்லவும் இப்போது நீங்கள் கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் ஒரு பகுதியில் இருப்பீர்கள்
  •  

  • அதில் add a Grdget என்னும் பகுதியை select செய்யும் போது ஒரு pop-up window ஒன்று திறக்கும் அதிலே HTML/Javascript என்பதைத்திறந்து அதனுள் கீழே உள்ள linkல் நான் பதிவேற்றியுள்ள codeஐ பதிவிறக்கி அதில் உள்ள codeஐ copy செய்து paste செய்யுங்கள்
http://rapidshare.com/files/140690699/comment_box.txt.html
  • அதிலே உள்ள codeல்  “http://YourBlogNameHere.blogspot.com” என்பதற்குப்பதிலாக உங்கள் ப்லொக் முகவரியை போட்டுக்கொள்ளுங்கள்
  •  இப்போது அதனை save செய்து கொள்ளுங்கள்
  • இப்போ Refresh செய்தீர்களானால் கடைசி பின்னுட்டப்பெட்டி தயார்.

No comments:

Post a Comment

நீங்களும் ஏதாவது சொல்லுங்க